ஆதி ரசிகர்களுக்குச் செம ட்ரீட்: ‘மீசையை முறுக்கு 2’ ரிலீஸ் எப்போ தெரியுமா?

ஆதி ரசிகர்களுக்குச் செம ட்ரீட்: ‘மீசையை முறுக்கு 2’ ரிலீஸ் எப்போ தெரியுமா?

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசையை முறுக்கு 2’ படத்திலிருந்து ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’ வரிசையில் ஐந்தாவது பாடலாக வெளியான ‘கலைவாணியே’ இப்போது இணையத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது!

காதல், திருமணம், குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்தப் பாடலை ஆதி எழுத, கௌஷிக் கிருஷ்ணா, சத்யபிரகாஷ், ஆதி இணைந்து பாடியுள்ளனர். திரைக்கதை, இயக்கம், இசை என ஆதியின் பன்முகத் திறமையோடு, சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், கருணாஸ், நாசர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் சேர்ந்துள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் செப்டம்பர் இருபத்தைந்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

Related Posts