தீப்பொறி பறக்க வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’: ‘அருகே அருகே’ பாடல் ரிலீஸ்!

  தீப்பொறி பறக்க வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’: ‘அருகே அருகே’ பாடல் ரிலீஸ்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் மாஸ் ஃபேண்டஸி திரில்லர் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே’ வெளியாகி வைரலாகி வருகிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை தமிழில் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் அர்மான் மாலிக் பாட, கன்னடத்தில் அனிருத் சுஸ்வரம் குரல் கொடுத்துள்ளார். மலையாளத்தில் ஷார்பு, தெலுங்கில் சனாரே, இந்தியில் நுமன் கோகர், கன்னடத்தில் ஹிருதயா சிவா ஆகியோர் வரிகளை எழுதியுள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் இருபதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தை துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சஜீல் பாபா, இஸ்மாயில் அபுபக்கர், பிலால் மொய்து திரைக்கதை அமைக்க; சஜீல் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் வசனங்களை எழுதியுள்ளனர்.

வெளியான நொடியிலிருந்தே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள இப்பாடல், படத்தின் மீதான ஆவலை எகிற வைத்துள்ளது. முன்னதாக வெளியான ட்ரெய்லரும் ஐந்து மொழிகளிலும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. மிரட்டலான ஆக்‌ஷன், சேசிங் காட்சிகளுடன் துல்கரின் அல்ட்ரா ஸ்டைலிஷ் லுக் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துள்ளது. தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் போஸ்டர்களும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

துல்கர் சல்மானின் நாற்பதாவது படமான இந்த பிரம்மாண்ட படைப்பில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜீ மியூசிக் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியுள்ளது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு, அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைப்பயிற்சி ஆகியவை படத்தின் பெரும் பலமாக அமைந்துள்ளன.

மெகா ஹிட் ‘லோகah’ படத்திற்குப் பிறகு வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படமாகவும், ‘ஆர் டி எக்ஸ்’ வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இயக்கும் படமாகவும் இது உருவாகியுள்ளது.

Related Posts