விஸ்வநாத் & சன்ஸ்: மாஸ் & கிளாஸ் சூர்யாவின் கம்பீர ஆட்டம்!
நாற்பது வயதைக் கடந்தும் கனவுகளைத் துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் சஞ்சய் விஸ்வநாத்தாக சூர்யா இதில் கலக்கியிருக்கிறார். துள்ளலான ஸ்டைல், கனிவான பாசம், சுடச்சுட நகைச்சுவை, நெஞ்சைத் தொடும் உணர்ச்சிகள் என அத்தனையையும் ஒரே ஆளாகத் தூக்கிச் சாப்பிட்டுத் திரையில் மாஸ் காட்டியிருக்கிறார்!
திரைக்கதையில் வெங்கி அட்லூரியின் மேஜிக்! ‘Lucky Baskhar’ புகழ் இயக்குநர் வெங்கி அட்லூரி, வழக்கம்போல தன் உணர்வுபூர்வமான கதைசொல்லல் பாணியால் ட்ரெய்லரிலேயே மனதை அள்ளுகிறார். மமிதா பைஜூவின் வசீகரச் சிரிப்பும், ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் கூட்டணியின் வலுவான நடிப்பும் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளன.
இசை & ஒளிப்பதிவில் மிரட்டல் தொனி! ஜி. வி. பிரகாஷ் குமாரின் மனதை வருடும் பின்னணி இசையும், நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளியமைப்பும் காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
விடுமுறை கொண்டாட்டம் உறுதி! சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் உருவகிள்ள இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14 சுதந்திர தின வார இறுதியில் உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் வெளியாகிறது. குடும்பத்தோடு சென்று ரசித்து மகிழக்கூடிய ஒரு பக்காவான என்டர்டெய்னர் படமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
