‘ஹபீபி’ ஹீரோ ஈசா… தமிழ் சினிமாவின் புதிய பாய்ச்சல்!
‘ஹபீபி’ கொடுத்த அசுர வெற்றியால், ஒரே படத்தில் திரையுலகின் கவனத்தை மொத்தமாகத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் இளம் நாயகன் ஈசா!
மதுரை டூ சென்னை… லா காலேஜ் படிப்பு… நேஷனல் லெவல் தடகளப் போட்டி பதக்கங்கள்… என ஸ்போர்ட்ஸ் மேனாகத் கெத்து காட்டியவர், இப்போது தமிழ் சினிமாவின் ’ஹாட் டாபிக்’ ஹீரோ!
“‘ஹபீபி’ படம் மூலமா எனக்குக் கிடைச்சிருக்கற அத்தனை புகழும், பாராட்டுகளும் என் இயக்குநர் மீரா கதிரவன் சாருக்குத்தான் சேரும்!” – வெற்றி வெளிச்சத்திலும் அத்தனை பணிவோடு பேசத் தொடங்குகிறார் ஈசா.
உதவி இயக்குநராகத் தொடங்கி… ஆடிஷனில் வென்று!
டைரக்டர் அமீர் நடிச்ச ‘உயிர் தமிழுக்கு’ படத்துல உதவி இயக்குநரா வேலை செஞ்சதுதான் இவரோட முதல் ஸ்டெப். “ஒரு காட்சியை எப்படி செதுக்கணும், நடிகர்கள்கிட்ட இருந்து வேலையை எப்படி வாங்கணும்னு அங்கதான் கத்துக்கிட்டேன். அதுவே எனக்கு பெரிய ஆக்டிங் கிளாஸா மாறுச்சு” என்கிறார்.
அடுத்து ‘ஹபீபி’ ஆடிஷன்… ஆறு மாசம் வெயிட்டிங்… அப்புறம் வந்த அந்த ஒரு கால்… ரிகர்சல் முடியும்போது கன்ஃபர்ம் ஆச்சு ஹீரோ சான்ஸ்! 
வெறித்தனமான உழைப்பு… 20 கிலோ வெயிட் கெயின்!
‘நான் தான் ஹீரோ’ங்கற கெத்து எதுவுமே இல்லாம, கதையோட கதாபாத்திரமா மட்டுமே வாழ்ந்திருக்கார் ஈசா. மூணு வித்தியாசமான காலக்கட்டங்கள்… அதுக்காக உடம்பைக் குறைச்சு, அப்புறம் படத்துக்காக 20 கிலோ எடையை ஏத்தி, மறுபடியும் எடையைக் குறைச்சுன்னு ஆளே மாறும் அசாத்திய உழைப்பு!
கஸ்தூரிராஜா, மாளவிகா மனோஜ்னு உடன் நடிச்சவங்களோட கெமிஸ்ட்ரியும் சேர்ந்து படம் செம ஹிட்!
திரையுலக ஜாம்பவான்களின் மெய்சிலிர்க்கும் பாராட்டுகள்!
மாரி செல்வராஜ், சுதா கொங்கரா, வெற்றிமாறன், மிஷ்கின், பா. ரஞ்சித், பி.சி. ஸ்ரீராம், ராம், சேரன், சசிகுமார்னு தமிழ் சினிமாவின் மொத்த பிசி டைரக்டர்ஸும் ஸ்பெஷல் ஷோ பார்த்துட்டு, “ஃபர்ஸ்ட் படத்துலயே என்ன ஒரு பாடி லாங்குவேஜ், வாய்ஸ் வேரியேஷன்… இதெல்லாம் வரம் பாய்!”னு தலையில் தூக்கி வச்சு பாராட்டியிருக்காங்க!
அடுத்தடுத்த ரவுண்டு… டபுள் மாஸ்!
‘ஹபீபி’ படத்தோட மாஸ் வெற்றியைத் தொடர்ந்து, இப்போ அடுத்தடுத்து ரெண்டு புதிய படத்துல ஹீரோவா கமிட் ஆகியிருக்கார் ஈசா. “ரெண்டுமே செம கமர்ஷியல் + சோஷியல் மெசேஜ் கலந்த படங்கள்… கூடிய சீக்கிரம் அஃபிஷியல் அனௌன்ஸ்மெண்ட் வரும்!”னு சஸ்பென்ஸ் வைக்கிறார்.
“விளையாட்டுத் துறையில எனக்குக் கிடைச்ச கட்டுப்பாடு, உழைப்புதான் என்னை சினிமாவுலயும் இயங்குது. நல்ல கதைகள், நல்ல படங்கள்… இதுதான் என்னோட அடுத்த டார்கெட்!” – நம்பிக்கையோடு சிரிக்கிறார் இந்த இளம் புயல்!
