தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் 2வது படம்: மலைவாழ் மக்களின் உரிமைகளை பேசும் படம்!

தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் 2வது படம்: மலைவாழ் மக்களின் உரிமைகளை பேசும் படம்!

Tam’s consultancy சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து, கதாநாயகனாக களமிறங்கும் புதிய திரைப்படம் ‘Production no : 2’. 2017-ஆம் ஆண்டு வெளியான ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இப்படத்தை இயக்குகிறார்.

மலைகளின் இளவரசியான ஏலகிரி மக்களின் எதார்த்த வாழ்வியலையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் எவ்வித புனைவுமின்றி நேர்த்தியாகப் பேசுகிறது இத்திரைப்படம்!

பொதுவுடைமைக் கொள்கை இம்மக்களின் வாழ்வில் செலுத்திய தாக்கத்தை அவர்களின் உண்மைக் குரலாகவே பதிவு செய்திருக்கும் இக்கதை, 2010 பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய சூழலுக்கும் மிகக்கச்சிதமாகப் பொருந்துகிறது. முக்கியமாக, இந்திய அளவிலும் தமிழக அரசியலிலும் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் ஊடுருவும் இடஒதுக்கீடு அரசியலை மிக அழுத்தமாகத் தொட்டுச் செல்கிறது.

திறமை இருந்தும் அதிகார வர்க்கத்தால் மறுக்கப்படும் அடையாளங்கள், அதைத் தாண்டி சாதித்த பின்னரும் மாறாத வாழ்வாதாரப் போராட்டம் எனப் பல பரிமாணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது இப்படைப்பு. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ பேசும் தேசத்தில், வெவ்வேறு வடிவங்களில் மறைந்திருக்கும் ஒடுக்குமுறைகளைத் திரையில் எந்த ஒளிவுமறைவுமின்றிப் பிரதிபலிப்பதே இப்படத்தின் முதன்மை நோக்கம்.

இத்திரைப்படத்தில் தமிழ்வாணன் கதாநாயகனாக நடிக்க, அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சி.எஸ்.கே சரவணன், பிக்பாஸ் பிரவீன், ‘ஜெய் பீம்’ மொசக்குட்டி, அகத்தியன், விஜயலக்ஷ்மி, அருணாச்சலம், லயன் சுரேஷ், மைக்கேல், ஸ்ரீராம், கெளசல்யா ஆகியோரோடு நிஜ மலைவாழ் கிரிக்கெட் வீரர்களும் கைகோர்த்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்களாக ஒளிப்பதிவு – தேவாசூர்யா, இசை – ஜோன்ஸ் ரூபெட், பாடல்கள் – பெருமாள் & நவீன், வசனம் – பெருமாள், கலை – சத்ய நாராயணன், நடனம் – விஜய் & அனந்த் குமார், சண்டைப்பயிற்சி – லோகு, ஆடை வடிவமைப்பு – பிரியா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.