‘டாக்ஸிக்’ ‘தபாஹி’: யாஷ் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமான செய்தி!

‘டாக்ஸிக்’ ‘தபாஹி’: யாஷ் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமான செய்தி!

ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமான செய்தி!

அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது.

ஆடியோவிலேயே ஆல் ரவுண்ட் ஹிட் அடித்த இந்தப் பாடல், இப்போது பிரம்மாண்டமான காட்சியமைப்போடு வெளியாகி ரசிகர்களின் கண்ணையும் கருத்தையும் கட்டிப்போட்டுள்ளது. யாஷ் மற்றும் கியாரா அத்வானி கெமிஸ்ட்ரி திரையில் தீப்பற்றி எரிகிறது!

விஷால் மிஸ்ரா இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் தமிழில் உருவாகியுள்ள இந்தப் பாடல், தடைசெய்யப்பட்ட ஆழமான காதலை அப்படியே கண்முன்னே கொண்டுவருகிறது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து வழங்கும் இந்த மெகா ஆகஸ்ட் விருந்து, வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் புயலைக் கிளப்பத் தயாராக உள்ளது.

Related Posts