கொழும்பில் களைகட்டிய லைகா வீட்டு கல்யாணம்! குவிந்த சினிமா பிரபலங்கள்!
கொழும்பே குதூகலப்படும் அளவுக்கு செம்ம மாஸாகவும், பிரம்மாண்டமாகவும் நடந்து முடிந்திருக்கிறது லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி வீட்டு கல்யாணம்!
லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான ஜி.கே.எம். தமிழ்குமரன் ஆகியோர் நேரில் வந்து, மணமக்களை மனதார வாழ்த்தி விழாவை சிறப்பித்தனர்.
அத்தோடு நிக்காம, தமிழ் சினிமாவோட இளவட்டப் பட்டாளமும் இந்த விழாவுக்கு விசிட் அடிச்சிருக்காங்க! இயக்குநர் ஜேசன் சஞ்சய், இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் மணிரத்னம், அப்புறம் நம்ம ‘மியூசிக் மேஸ்ட்ரோ’ சந்தோஷ் நாராயணன் அவரோட குடும்பத்தோட வந்து மணமக்களை வாழ்த்தி அசத்தியிருக்காங்க.
சொந்த பந்தங்கள், நண்பர்கள், சினிமா மற்றும் தொழில்துறை விஐபிக்கள் என ஒட்டுமொத்தக் கூட்டமும் திரண்டு வர, செம்ம ஹேப்பியான வைப்ஸோடு, வேற லெவலில் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது இந்தத் திருமண விழா!

