#PRS01: ஆறு இயக்குநர்கள்… ஒரு படம்: பிரதீப் ரங்கநாதனின் மிரட்டல்!

#PRS01: ஆறு இயக்குநர்கள்… ஒரு படம்: பிரதீப் ரங்கநாதனின் மிரட்டல்!

மிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷன் பிரதீப் ரங்கநாதன், இப்போது தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். ‘லவ் டுடே’ ஸ்டார் பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘#PRS01’ என பெயரிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘வுமன் சென்ட்ரிக்’ கதையாக உருவாகும் இத்திரைப்படத்தின் அட்டகாசமான அறிமுக காணொளி தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

மிரட்டலான கூட்டணி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில், மலையாள ‘பிரேமலு’ புகழ் மமீதா பைஜு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்குகிறது.

புதுமையான இயக்கம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சாதனை முயற்சி அரங்கேறுகிறது. பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஆறு பேர் ஒன்றிணைந்து, ‘தி ஆல்ஃபா யூனிட்’ (The Alpha Unit) என்ற பெயரில் இந்த படத்தை இயக்குகிறார்கள்.

பலமான தொழில்நுட்பக் குழு

  • இசை: ‘கண்மணி அன்போடு’ அல்பம் பாடல் புகழ் சாய் அபயங்கர்

  • ஒளிப்பதிவு: தினேஷ்குமார் புருஷோத்தமன்

  • படத்தொகுப்பு: பிரதீப் ராகவ்

எகிறும் எதிர்பார்ப்பு

ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் ‘டிராகன்’ திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இணைந்திருப்பது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் பிஸியான சூழலிலும் அஸ்வத் மாரிமுத்து இதில் இணைந்திருப்பது கோலிவுட்டில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துள்ளலான பின்னணி இசை, முன்னணி நட்சத்திரங்களின் அசத்தலான லுக் மற்றும் வித்யாசமான கான்செப்ட்டுடன் வெளியாகியிருக்கும் இந்த அறிமுக காணொளி, சினிமா ரசிகர்களிடையே இப்போதே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.