‘ஹைக்கூ’ டப்பிங் தொடங்கியது: உற்சாகத்தில் ஏகன்!

‘ஹைக்கூ’ டப்பிங் தொடங்கியது: உற்சாகத்தில் ஏகன்!

டப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனல் பறந்து கொண்டிருக்க, சென்னையில் நடந்த எளிய பூஜையுடன் கதாநாயகன் ஏகன் தனது டப்பிங் பணியைத் தொடங்கி அசத்தியுள்ளார்.

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஹைக்கூவில் ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். கேரளா, கோவை, சென்னை எனப் பல இடங்களில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இப்போது முழு வேகத்தில் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் ஒவ்வொரு கட்டமும் திட்டமிட்டபடி கச்சிதமாக முடிந்துள்ளதில் தயாரிப்பாளர்கள் செம குஷியாக உள்ளனர். “இயக்குநர், நடிகர்கள் என ஒட்டுமொத்த டீமின் அர்ப்பணிப்பும் பிரமாதம், படத்தை விரைவில் ரசிகர்களிடம் கொண்டு வர இரவு பகலாக வேலை பார்க்கிறோம்” எனத் தயாரிப்பு தரப்பு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது.

ஹரி ஹரன் ராம் திரைக்கதையில் மெருகேற்ற, பிரியேஷ் குருசாமி கேமராவை கையாள, சித்து குமாரின் இசையில் படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இதன் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அடுத்தடுத்த அதிரடி அப்டேட்டுகளைக் கொடுக்க படக்குழு தயாராகி வரும் நிலையில், திரையரங்குகளில் ஹைக்கூவை ரசிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்!