ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா! மம்முட்டி – மோகன்லால் கூட்டணியில் மிரட்ட வரும் ‘பேட்ரியாட்’..!
திரையுலகில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அரசியல் அதிரடித் திரில்லர் திரைப்படம் ‘பேட்ரியாட்’ ஜூன் ஐந்தாம் தேதி அன்று நேரடியாக உங்கள் ZEE5 தளத்தில் வெளியாகிறது. மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருபெரும் ஆளுமைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தக் கதையின் நாயகர்கள் மற்றும் இயக்குநர் படம் பற்றிப் பகிர்ந்த சுவாரசியமான விஷயங்கள் இதோ:
இயக்குநர் மகேஷ் நாராயணன்:
நாம் வாழும் தற்போதைய காலகட்டத்தின் அச்சங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கதையே ‘பேட்ரியாட்’. மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் தொழில்நுட்பமே, அவர்களுக்கு எதிராக மாறி பயத்தையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும் உலகை இந்தப் படம் பேசுகிறது. ஒரு காலத்தில் தான் முழுமையாக நம்பிய ஒரு விஷயத்தின் விளைவுகளை, தானே எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் ஒரு மனிதனின் உணர்ச்சிப் போராட்டமே என்னை இதில் பெரிதும் ஈர்த்தது.
மெகா ஸ்டார் மம்முட்டி:
இந்தப் படத்தின் பிரம்மாண்டத்திற்கும் அரசியல் பதற்றத்திற்கும் பின்னால், மனசாட்சி, பொறுப்பு மற்றும் தைரியம் பற்றிய ஆழமான மனிதக் கதை ஒளிந்திருக்கிறது. அதுதான் ‘பேட்ரியாட்’ திரைப்படத்தை இவ்வளவு வலுவானதாக மாற்றுகிறது. படம் பார்ப்பவர்களிடம் பல கடினமான கேள்விகளை எழுப்பும் அதே வேளையில், உணர்வுப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் இருக்கும்.
சூப்பர் ஸ்டார் மோகன்லால்:
உண்மையும் அதிகாரமும் தொடர்ந்து மோதிக்கொள்ளும் தற்கோதைய உலகைப் பற்றிப் பேசுகிறது ‘பேட்ரியாட்’. சினிமாத்தனமும் தற்போதைய காலத்திற்குத் தேவையான ஆழமான கருத்தும் கொண்ட ஒரு படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டியுடன் இப்படி ஒரு அழுத்தமான கதையில் இணைந்தது இந்த அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.
அரசியல் சூழ்ச்சி, அதிநவீன கண்காணிப்பு மற்றும் தேசபக்திக்கு இடையே நடக்கும் இந்த அதிரடிப் போராட்டத்தைக் காணத் தயாராகுங்கள்! மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தை ZEE5 தளத்தில் கண்டு மகிழுங்கள்!

