KRG கண்ணன் ரவி தயாரிப்பில் பிரபு தேவா & வடிவேலு இணையும் “பேங் பேங்” படப்பிடிப்பு நிறைவு!

KRG கண்ணன் ரவி தயாரிப்பில்  பிரபு தேவா & வடிவேலு இணையும் “பேங் பேங்” படப்பிடிப்பு  நிறைவு!

டான்ஸ் ஆடிக்கொண்டே அதிரடி காட்டும் ‘நடனப்புயல்’ பிரபு தேவாவும், பார்த்தாலே சிரிக்க வைக்கும் ‘வைகைப்புயல்’ வடிவேலுவும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் மீண்டும் கைகோர்த்துள்ள படம் “பேங் பேங்”. KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!

வெறும் ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவிற்குப் புதியதான ‘ஜோம்பி’ (Zombie) வகை ஜானரில், ஹாரர் கலந்த காமெடி விருந்தாக இப்படம் தயாராகி வருகிறது. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற ‘மவுண்ட் புரோமோ’ எரிமலைப் பகுதிகளில் தொடங்கி, மலேசியாவின் அழகிய லொகேஷன்கள் வரை 10 நாட்கள் எடுக்கப்பட்ட பிரமாண்ட காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என படக்குழுவினர் உற்சாகமாகத் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வெளியான டீஸரில் “பிரபு வேலு”, “வடி தேவா” என பெயர்களிலேயே அதிரடி நகைச்சுவையைத் தூவியது சமூக வலைதளங்களில் செம்ம வைரலானது.

யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு மற்றும் ‘அனிமல்’ பட புகழ் சின்க் சினிமா நிறுவனத்தின் சவுண்ட் டிசைன் என ஒரு தொழில்நுட்பப் பட்டாளமே இப்படத்தில் களமிறங்கியுள்ளது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

பிரபு தேவாவின் ஸ்டைலும், வடிவேலுவின் டைமிங் காமெடியும் ஜோம்பிகளோடு மல்லுக்கட்டப் போகும் அந்த ‘பேங் பேங்’ தருணங்களுக்காக ரசிகர்கள் இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்! அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அனல் பறக்க வெளியாக உள்ளன.