ஜெய்யின் பிறந்தநாள் ட்ரீட்: ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் ஆக்ரோஷமான ‘பாரதியார்’ பாடல் வெளியீடு!

ஜெய்யின் பிறந்தநாள் ட்ரீட்: ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் ஆக்ரோஷமான ‘பாரதியார்’ பாடல் வெளியீடு!

டிகர் ஜெய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் குஷியாகும் வகையில் “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ஒரு அதிரடியான பரிசை வழங்கியுள்ளது. பாரதியாரின் கனல் தெறிக்கும் வரிகளில், படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பாரதியார் வரிகளில் ஒரு அரசியல் ஆக்ரோஷம்!

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய இந்த வரிகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய சமூக அவலங்களையும் அரசியல் சூழலையும் தோலுரித்துக் காட்டும் வகையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், மதுரை ராப் இசைக்குழுவான ‘மதுரை சோல்ட்ஜர்ஸ்’ உடன் இணைந்து இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த வேளையில், மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்தப் பாடல், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

களம் காணும் புதுமையான திரில்லர்

BV Production தயாரிப்பில், இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரு புதுமையான ‘ரொமான்டிக் திரில்லர்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்துள்ளனர்.

சமூகத்தின் கசப்பான உண்மைகளையும், மனித வாழ்வின் மாற்றங்களையும் பேசும் இந்தப் படம், நாட்டில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகளைத் தைரியமாகத் திரையில் கொண்டு வரவுள்ளது.

மே மாதம் திரையில்…

ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவில், டார்லிங் ரிச்சர்ட்சனின் எடிட்டிங்கில் தரம் குறையாமல் உருவாகியுள்ள இப்படம், தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. தேர்தல் திருவிழா முடிந்த கையோடு, வரும் மே மாதம் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது “சட்டென்று மாறுது வானிலை”.


ஆக்ரோஷமான அந்தப் பாடலைக் காண: இங்கே கிளிக் செய்யவும்

Related Posts