ஏப்ரல் 10 முதல் ‘TN 2026’: நட்டி நட்ராஜின் அதிரடி அரசியல் ஆரம்பம்!
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திரையரங்குகளிலும் அரசியல் அதிரடி ஆரம்பமாகப்போகிறது! கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக மிரட்டியிருக்கும் “TN 2026” திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. தம்பி ராமையாவின் கதையில், அரசியல் பகடியும் சமூக அக்கறையும் கலந்த ஒரு பக்கா கமர்ஷியல் விருந்தாக இப்படம் உருவாகியுள்ளது.
வெளியாகியிருக்கும் போஸ்டரே படத்தின் அதிரடியைப் பறைசாற்றுகிறது. மேடை மீது நட்டி நட்ராஜ் கம்பீரமாக நிற்க, சுற்றிலும் தொண்டர் பட்டாளம் கொடிகளுடனும் கிண்டலான வசன பதாகைகளுடனும் சூழ்ந்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நட்டியுடன் இணைந்து சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் களம் கண்டுள்ளது.
முக்கியமாக, தமிழ் சினிமாவின் தேர்ந்த கலைஞர்களான எம்.எஸ். பாஸ்கர், இளவரசு மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிப்பதோடு, ரெடின் கிங்ஸ்லி முதல் இந்திரஜா ரோபோ சங்கர் வரை ஒரு பெரும் நகைச்சுவைப் பட்டாளமே வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கக் காத்திருக்கிறது. சாண்டியின் கேமியோ மற்றும் தர்புகா சிவாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒட்டுமொத்தத்தில், இந்த கோடை விடுமுறையில் குடும்பத்தோடு கொண்டாடும் ஒரு கலகலப்பான அரசியல் கொண்டாட்டமாக “TN 2026” அமையப்போவது உறுதி!

