‘பள்ளிச்சட்டம்பி’: ஜன கண மன கூட்டணியின் அடுத்த மேஜிக்!

மலையாள திரையுலகின் ‘மின்னல் முரளி’ டொவினோ தாமஸ் மீண்டும் ஒரு அதிரடி ஆக்ஷன் அவதாரத்தோடு களம் இறங்கிவிட்டார்! ‘குயின்’, ‘ஜன கண மன’ போன்ற செம ஹிட் படங்களை கொடுத்த மேஜிக் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

வெறும் டீசர் தானே என்று நினைத்தால் தப்பு! இது ஒரு பக்கா ‘சினிமாட்டிக் ட்ரீட்’. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளால் அனல் பறக்கிறது. மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் இது ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆக்ஷன் மட்டுமா? எல்லா வயதினரும் கொண்டாடும் வகையில் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக இந்தப் படம் இருக்கும் என்று படக்குழுவினர் கெத்தாக உறுதி அளித்துள்ளனர்.

ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் இந்தப் படம் ஏற்கனவே பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, இதில் இடம்பெற்ற ‘காட்டு செம்பகம்’ பாடல் இப்போது சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்! மோகன் ராஜாவின் வரிகளில், அகில் ஜே. சந்த் மற்றும் அவனி மல்ஹார் குரலில் இந்தப் பாடல் மனதை வருடும் ஒரு அழகான மெலோடியாக அமைந்துள்ளது. ஒரு பக்கம் அதிரடி டீசர், இன்னொரு பக்கம் அழகான குடும்பப் பாடல் என படக்குழுவினர் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளனர்.

இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இணைவது இது 4-வது முறை. இவர்களது முந்தைய படங்களான ‘குயின்’ மற்றும் ‘ஜன கண மன’ பாடல்கள் இன்றும் நம் ப்ளே-லிஸ்ட்டில் டாப் 10-ல் இருப்பவை. இந்திய சினிமாவின் பெருமை எஸ்.எஸ். ராஜமௌலியே வியந்து பாராட்டிய இயக்குனர் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. அதற்கேற்றார் போல, IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்கள் பட்டியலிலும் ‘பள்ளிச்சட்டம்பி’ இடம்பிடித்துள்ளது!

டொவினோவுடன் இணைந்து அனுபவ நடிகர் விஜயராகவன் முக்கிய ரோலில் மிரட்ட, நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். எஸ். சுரேஷ் பாபுவின் திரைக்கதையில், டிஜோ டோமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்ணுக்கு விருந்தாக வந்துள்ளன. வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் பிரதர்ஸ் இணைந்து இந்தப் பிரம்மாண்ட படைப்பைத் தயாரித்துள்ளனர்.

குறிச்சு வச்சுக்கோங்க! வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் ‘பள்ளிச்சட்டம்பி’ பான்-இந்தியா ரிலீஸாகத் திரையரங்குகளில் கர்ஜிக்க வருகிறது.

Related Posts