‘நீ ‘Forever’ மார்ச் 27ரிலீஸ்! எதிர்பார்ப்பை எகிற வைத்த இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!”

‘நீ ‘Forever’ மார்ச் 27ரிலீஸ்! எதிர்பார்ப்பை எகிற வைத்த இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!”

வீன காலக் காதல், இளமை துள்ளும் கதையம்சம் என கோலிவுட்டில் ஒரு புதிய அதிர்வை ஏற்படுத்தத் தயாராகிவிட்டது “நீ Forever”. ஷென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) தயாரிப்பில், இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படு மாஸாக நடைபெற்றது!

கூட்டணியும் கொண்டாட்டமும்!

“தருணம்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஜோடி மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்கள். விழாவில் பேசிய அத்தனை பேரின் குரலிலும் தெரிந்தது ஒரே ஒரு விஷயம்தான் – அது இந்த டீமின் அசுர உழைப்பு!

  • தயாரிப்பாளர் தனஞ்செயன் குஷி: “நல்ல படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு என்பதற்கு இந்தப் படமே சாட்சி. தியேட்டர் ரிலீஸூக்கு முன்பே இதன் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) கைப்பற்றியிருப்பது படக்குழுவின் தரமான உழைப்புக்குக் கிடைத்த முதல் வெற்றி!” எனப் பாராட்டித் தள்ளினார்.

  • இயக்குநரின் 6 மாத தவம்: எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசுகையில், படத்தின் கதைக்காக இயக்குநர் அசோக் சுமார் 6 மாதங்கள் செதுக்கிய விதத்தையும், டீமின் சப்போர்ட்டையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

இசையும்… இளமையும்!

இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த், இந்தப் படம் ஒரு 2 வருடப் பயணம் என எமோஷனலாகப் பேசினார். பாடலாசிரியர் கு.கார்த்திக், “இளம் தலைமுறைக்கு இது ஒரு செம ட்ரீட்” என கார்ண்டி கொடுத்திருக்கிறார். நடன இயக்குநர் விஜயராணி, பட்ஜெட் கச்சிதமாக இருந்தாலும் அவுட்புட் பிரம்மாண்டமாக வந்திருப்பதை உறுதி செய்தார்.

நட்சத்திரப் பட்டாளம்:

டாக்டர் வித்யா, நடிகை சினேகா சக்தி, நடிகர் பிரதோஷ் என ஒவ்வொருவரும் பொள்ளாச்சி ஷூட்டிங் அனுபவங்களையும், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் நிழல்கள் ரவி போன்ற சீனியர் நடிகர்களுடன் பணியாற்றிய பெருமையையும் மேடையில் பகிர்ந்தனர். நடிகர் ஹரி பாஸ்கர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ராஜா ஆகியோர் படக்குழுவிற்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

காதல், காமெடி, எமோஷன் என கலகலப்பான பேக்கேஜாக உருவாகியுள்ள “நீ Forever” வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் தடம் பதிக்கிறது.

Related Posts