GenZ தலைமுறை ரொமான்ஸ் டிராமா, ‘நீ Forever’: மார்ச் 27 ரிலீஸ்!

GenZ தலைமுறை ரொமான்ஸ் டிராமா, ‘நீ Forever’: மார்ச் 27 ரிலீஸ்!

ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இளமை துள்ளும் காதல் காவியம் “நீ Forever”. வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் கூட்டணியில் “தருணம்” படத்தைத் தொடர்ந்து வெளியாகும் இரண்டாவது படைப்பு இதுவாகும்.

இன்றைய ‘GenZ’ தலைமுறையின் டிஜிட்டல் உலகத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியின் கதையை இயக்குநர் அசோக்குமார் கலைவாணி ரசனையுடன் செதுக்கியுள்ளார். நவீன காலக் காதலில் ஏற்படும் சுவாரசியமான விளைவுகளைப் படம் நகைச்சுவை கலந்து பேசுகிறது.

நாளைய இயக்குநர் நாயகன் சுதர்ஷன் கோவிந்த் மற்றும் கேரள வரவு அர்ச்சனா ரவி இதில் ஜோடி சேர்ந்துள்ளனர். ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சென்னையின் முக்கிய அடையாளங்கள் மற்றும் பொள்ளாச்சியின் பசுமையில் காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியுள்ளது. அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை முணுமுணுக்க வைத்து வருகின்றன. விளம்பரப் பணிகள் தீயாய் நடந்து வரும் நிலையில், மார்ச் 27 முதல் உங்கள் இதயங்களை வசீகரிக்க வருகிறது “நீ Forever”.

Related Posts