‘ஓ பட்டர்ஃப்ளை’: உறவுகளின் மர்மத் த்ரில்லர்!
ஆன்ட்ஹில் சினிமா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. வரும் மார்ச் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தைப் பற்றி படக்குழுவினர் பகிர்ந்த சுவாரசியமான தகவல்கள்:
ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன்:
“ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக எடுத்து விட்டோம். மார்ச் 6-ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்.”
இசையமைப்பாளர் வைசாக் சோமநாத்:
“இயக்குநருக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவு இருந்தது. அதனால் எனக்கு வேலை எளிதானது. இந்த படத்தில் பணி புரிந்தது ஒரு நல்ல அனுபவம்.”
தயாரிப்பாளர் ஆனந்த் ஷா:
“விஜய் ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உழைத்துள்ளார். மும்பையில் அலுவலகம் போடலாம் என்று நான் சொன்னபோது, அந்தப் பணத்தையும் படத்திற்கே செலவு செய்யலாம் என்று கூறிய நேர்மையான மனிதர் அவர்.”
தயாரிப்பாளர் வெங்கி:
“35 வீடுகளைத் தேடி அலைந்து ஒரு வீட்டைத் தேர்வு செய்தார் விஜய். எதிலும் பர்ஃபெக்ஷன் வேண்டும் என்று நினைப்பவர். அவருடைய கடும் உழைப்பிற்காக இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.”
நடிகர் அத்துல்:
“இயக்குநர் இல்லை என்றால் நான் இந்த படத்தில் இல்லை. நிவேதிதா மற்றும் நாசர் சார் போன்ற திறமையானவர்களுடன் நடித்தது பெருமை. டெக்னிக்கல் டீம் இந்த படத்திற்குப் பெரிய பலம்.”
நடிகர் சிபி சந்திரன்:
“யாரும் முழுமையாக நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ரிலேஷன்ஷிப்பில் நாம் சிலவற்றை மறைக்கும்போது ஏற்படும் அந்தப் பயம், ஒரு மர்டர் மிஸ்டரியை விடப் பெரிய த்ரில்லர். இந்தப் படம் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான மெண்டல் ஹெல்த் பற்றிப் பேசுகிறது.”
நடிகை நிவேதிதா சதீஷ்:
“சினிமாவே வேண்டாம் என்று நான் ஒதுங்கியிருந்த நேரத்தில் வந்த கதை இது. அறுவை சிகிச்சை காரணமாகத் தாமதமானாலும், எனக்காகக் காத்திருந்து வாய்ப்பளித்தனர். ஹியூமன் எமோஷன்ஸ் பற்றிப் பேசும் இந்தப் படம் ஒரு புதிய ஜானரில் இருக்கும்.”
இயக்குநர் விஜய் ரங்கநாதன்:
“சினிமாவில் தனித்துவமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உருவானதுதான் இந்தப் படம். சிங்க் சவுண்ட் (Sync Sound) முறையில் எடுக்கத் திட்டமிட்டதால், தமிழ் தெரிந்த நடிகை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அப்படித் தான் நிவேதிதா உள்ளே வந்தார். இது ஒரு யுனிக் அட்டெம்ப்ட்.”
நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘ஓ பட்டர்ஃப்ளை’ வரும் மார்ச் 6-ம் தேதி முதல் திரையரங்குகளில் உங்கள் பார்வைக்கு!

