மாலா மணியன் & குட்டிரேவதி கூட்டணியில் ‘சிறகு’: உறவுகளின் பயணம்!
நண்பர்களுடன் இணைந்து ‘பிரண்ட்ஸ் ஃபண்டிங்’ முறையில் மாலா மணியன் தயாரிக்க, கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகி உள்ளது, சிறகு திரைப்படம். ‘மெட்ராஸ்’ படத்தின் ஜானி புகழ் ஹரிகிருஷ்ணன் ஹீரோவாக கலக்க, கோவைப் பெண் அக்ஷிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இது வெறும் சினிமா மட்டுமல்ல, இசை, பயணம் மற்றும் ஆழமான உறவுகளைப் பேசும் ஒரு கம்ப்ளீட் ‘ஃபீல் குட்’ மூவி!
மதுரையில் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்!
தயாரிப்பாளர் ஏற்கனவே சென்னையில் 5 முறை திரையிடப்பட்டு பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய ‘சிறகு’, அடுத்ததாக மதுரைக்கு விசிட் அடிக்கிறது!
உலக மகளிர் தினமான மார்ச் 8, ஞாயிறு மாலை 6 மணிக்கு, மதுரை கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்படுகிறது. நிகழ்வில், இயக்குநர், தயாரிப்பாளர், நாயகி என மூன்று பெண்களும் இந்தச் சிறப்பு காட்சியில் நேரில் பங்கேற்கிறார்கள்!
வெளிநாட்டிலும் ஒரு ‘வெற்றி’ நடை!
ரிலீஸ்க்கு முன்பே நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் (2023) சிறந்த முதல் தயாரிப்பாளர் மற்றும் சிறந்த அறிமுக நாயகி என இரண்டு விருதுகளைத் தட்டி வந்து கெத்து காட்டியிருக்கிறது இந்தச் ‘சிறகு’.
“எல்லா வயதினரும் குடும்பத்தோடு ரசிக்கும்படி இந்தப் படம் இருக்கும்!” என நம்பிக்கையோடு சொல்கிறார் தயாரிப்பாளர் மாலா மணியன்.
நீங்களும் பார்க்கலாம்!
நீங்களும் இந்தச் சிறப்பு பிரீமியர் காட்சியில் கலந்துகொள்ள ஆசையா? படத்தின் போஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு ஒரு கால் போட்டு உடனே உங்கள் சீட்டை புக் பண்ணிக்கோங்க!
📞 8925161181
