இந்தியாவின் முதல் ‘கற்றல் திருவிழா’: கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’!
குழந்தைகளின் கல்வி என்பது வெறும் புத்தகப் சுமை அல்ல; அது ஒரு கலை! அந்தத் திணிப்பு முறையைத் தகர்த்து, கற்றலை இனிமையான விளையாட்டாக மாற்றச் சென்னை கிளாம்பாக்கத்தில் கால்பதித்துள்ளது இந்தியாவின் முதல் அனுபவ அறிவுசார் கற்றல் கூடமான ‘கலர் பென்சில்’ (Color Pencil).
‘ஏன்?’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்!
கலர் பென்சில் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணன் அவர்கள் கூறுகையில்:
“இக்காலத்தில் குழந்தைகளுக்குக் கல்வியைத் திணிப்பது அதிகமாகிவிட்டது. ‘ஏன்?’ என்று கேள்வி கேட்கும் குழந்தைகளைத்தான் உலகிற்குத் தேவை. அதை ஊக்குவிக்கவே ‘Joy of Y’ எனும் கருத்தாக்கத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் நோக்கம் குழந்தைகளை ஐ.ஐ.டி-க்கு அனுப்புவதோ அல்லது நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வைப்பதோ அல்ல; அவர்களின் அடிப்படை அறிவை (Foundation) வலுப்படுத்துவதே எங்களது உறுதிமொழி!”

புத்தகங்களே பயிற்சி ஆசான்கள்!
இந்த மையத்தின் தனித்தன்மைகள் குறித்து அதன் முதன்மைச் செயல் அதிகாரி மீனா சப்ரியா பகிர்ந்துகொண்டவை:
-
கட்டணமில்லா கற்றல்: இங்கு வகுப்புகளுக்குக் கட்டணம் ஏதுமில்லை! வெறும் 400 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வாங்கினாலே போதும், அங்கேயே பயிற்சியும் பெறலாம்.
-
உலகத்தரம்: ஜப்பானிய மொழி, காகிதக் கலை (Origami) போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக வழங்கப்பட உள்ளன.
-
பிரம்மாண்டம்: 3,300 சதுர அடியில், 34-க்கும் மேற்பட்ட தனித்துவமான புத்தகங்கள் மற்றும் பயிற்சிக் கருவிகளுடன் இம்மையம் இயங்குகிறது. அடுத்த ஓராண்டில் இந்தியா முழுவதும் ஐந்து கிளைகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாழ்த்திய நட்சத்திரங்கள்!
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரைக்கலைஞர் வாணி போஜன், “குழந்தைகள் குதூகலமாகத் துள்ளி விளையாடிப் படிப்பதைக் காண்பதே பெரும் மகிழ்ச்சி,” என வாழ்த்தினார்.
தொடர்ந்து, கலர் பென்சில் நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ‘மைக்செட்’ ஸ்ரீராம், “அறிவையும் மொழியையும் அனுபவ ரீதியாகக் குழந்தைகள் கற்கும்போது அவர்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். இத்தகைய முயற்சியில் இணைந்ததில் பெருமை கொள்கிறேன்,” என உற்சாகத்துடன் பேசினார்.
குழந்தைகளின் கற்றல் பயணத்தை இனிமையாக்க நீங்கள் தயாரா?

