‘ரெட் லேபல்’ விமர்சனம்: காலேஜ் பாலிடிக்ஸ் கலந்த கமர்ஷியல் காக்டெய்ல்!

‘ரெட் லேபல்’ விமர்சனம்: காலேஜ் பாலிடிக்ஸ் கலந்த கமர்ஷியல் காக்டெய்ல்!

ஈரோடு மண்வாசனை, துடிப்பான கல்லூரி அரசியல், மற்றும் விறுவிறுப்பான திரில்லர் என ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக களம் இறங்கியிருக்கிறது இந்த “ரெட் லேபல்”. தமிழ் சினிமாவில் வழக்கமான காதல் கதைகளுக்கு மத்தியில், சமூகப் பொறுப்பும் அரசியலும் கலந்த ஒரு ‘சோஷியல்-திரில்லர்’ ஜானரில் இந்தப் படம் கவனம் ஈர்க்கிறது.

படத்தின் கதை ஒரு பரபரப்பான கல்லூரித் தேர்தலைச் சுற்றி நகர்கிறது. எம்.எல்.ஏ மகனின் அதிகார பலம், ரௌடிஸம் என கல்லூரி வளாகம் போர்க்களமாக மாறத் தயாராகும் வேளையில், கதைக்குள் என்ட்ரி கொடுக்கிறார் நம்ம ஹீரோ லெனின்.

முன்னாள் மாணவரான அவர், நேர்மையின் சிகரமாக இருந்தாலும் கொஞ்சம் முன்கோபி. இடையில் அவர் மீது இருக்கும் பழைய போலீஸ் வழக்குகள் ஒரு பக்கம் பயமுறுத்த, இன்னொரு பக்கம் எதிரணியில் இருக்கும் எம்.எல்.ஏ. மகளுடனேயே காதல்.. அதன் பிறகு அதிரடியாக சில சம்பவங்கள் நடக்க…  இறுதியில் நீதி வென்றதா என்பதே கதை.

அறிமுக நாயகன் லெனின் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தேர்தல் மோதல்களின் போது அவர் காட்டும் அந்த ‘ஆட்டிட்யூட்’ ரசிக்க வைக்கிறது.ஹீரோயின் அஸ்மின் யாசர் அழகான நடிப்பால் மனதைக் கவர்கிறார்.  கிளைமாக்சில் திடீர் சர்ப்ரைஸ் தருகிறார். அது என்ன என்பதை படத்தில் பாருங்கள்.

முனிஷ்காந்த் தனது டிரேட்மார்க் நகைச்சுவையாலும், ஆர்.வி. உதயகுமார் மற்றும் அனு மோகன் ஆகியோர் அனுபவ நடிப்பாலும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.  மேலும் அனுமோகன், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கின்றனர்.

இசையமைப்பாளர் கைலாஸ் மேனன் படத்தின் மற்றொரு ஹீரோ என்றுதான் சொல்ல வேண்டும். கல்லூரி அரசியல் மோதல்களின் போது அதிரடி காட்டும் பின்னணி இசையும், மென்மையான காதல் காட்சிகளில் இதமான மெலடிகளும் படத்திற்குப் பெரும் பலம்.

ஒளிப்பதிவாளர் சதிஷ் மையப்பன் ஈரோட்டின் இயல்பான அழகையும், தேர்தல் களத்தின் பதற்றத்தையும் கேமராவிற்குள் நேர்த்தியாகக் கடத்தியுள்ளார். லாரன்ஸ் கிசோரின் எடிட்டிங் கச்சிதமாக இருப்பதால், தேவையற்ற இழுவையின்றி படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

, பொன் பார்த்திபனின் ஆழமான வசனங்களைச் சரியாகப்  பயன்படுத்தி ஒரு ஜனரஞ்சகமான படத்தை உருவாக்கியுள்ளார், இயக்குநர் கே.ஆர். வினோத். புதுமுகங்களை வைத்துக்கொண்டு இவ்வளவு விறுவிறுப்பான ஒரு அரசியல் திரில்லரைத் தந்தது அவரது இயக்கத் திறமைக்குச் சான்று. மொத்தத்தில், “ரெட் லேபல் – தரமான அரசியல் பாடம் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் காவியம்!”

Related Posts