தி ராஜா சாப் : திரை விமர்சனம்
டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கீர்த்தி பிரசாத் தயாரிப்பில் மாருதி இயக்க, பிரபாஸ் நாயகனாக தோன்ற.. காதல், ஹாரர், பேண்டஸி என கலவையாக உருவாகி ரசிக்க வைக்கும் திரைப்படம், தி ராஜா சாப்.
பெற்றோர் இல்லாத, பிரபாஸ் பாட்டியின் அரவணைப்பில் வாழ்கிறார். அந்த பாட்டிக்கு மறதி நோய். ஆனால், தொலைந்து போன தனது கணவர்நினைவை மட்டும் இழக்கவே இல்லை. அவரை கண்டுபிடிக்க வேண்டும் என துடிக்கிறார்.
தன்னை பாசத்துடன் வளர்க்கும் பாட்டிக்காக, தாத்தாவை தேடிக்கிளம்புகிறார் பிரபாஸ்.
இன்னொரு பக்கம், தாத்தா சஞ்சய் தத் ஒரு மாந்திரிகவாதி, பணத்தை திருடுபவர் என்றெல்லாம் தெரியவருகிறது. தவிர, சமுத்திரகனியும் சஞ்சய் தத் தேடி வருகிறார்.
அதநஅ பிறகு என்ன ஆனது.. சஞ்சய் தத் யார், சமுத்திரகனி யார்.. பிரபாஸ் நோக்கம் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.
அவரை கண்டுப்பிடித்தாரா?, சமுத்திரகனி யார், என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.
அடிதடி, மோதல் என மூர்க்கமாகவே வரும் பிரபாஸ் இதில் ஜாலி இளைஞராக கலகலப்பூட்டுகிறார். பேயைக் கண்டு பயப்படுவது, எதற்கெடுத்தாலும் கிண்டலடிப்பது, மூன்று காதலிகளை சமாளிப்பது என கலகலப்பூட்டுகிறார் பிரபாஸ்.
முக்கியமாக,கிளைமாக்ஸில் தன் தாத்தா சஞ்சய் தத்-டன் சவால் விட்டு, பிறகு ஓடும் காட்சியில் கைதட்டலை அள்ளுகிறார்.
மாளவிகா, நிதி, ரிதி என மூன்று ஹீரோயின்கள். கவர்ச்சி காட்டுவது, தங்களுக்குள் மோதிக்கொள்வது என்பதைத் தவிர வேறு வேலை இல்லை. மாளகாவுக்கு மட்டும் சின்ன பைட் சீன்.
வில்லனாக மிரட்டி இருக்கிறார் சஞ்சய் தத். அவரது தோற்றமும், மாய மந்திரங்களும் நடுங்க வைக்கின்றன.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு அசரடிக்கிறது. குறிப்பாக அந்த மந்திரவாதி பங்களாவை பல்வேறு கோணங்களில் காண்பித்து பிரமிக்க வைத்து இருக்கிறார்.
இசையால் ரசிக்க வைக்கிறார் தமன் எஸ். பாடல்களில் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் ஈர்க்கிறார்.
வி.எப்.எக்ஸ். பணிகள் பிரிமிக்க வைக்கின்றன.
மொத்தத்தில் பிரமிக்க – ரசிக்க வைக்கும் படத்தை அளித்து இருக்கிறார் இயக்குநர் மாருதி.
ரேட்டிங்: 3.9/5
.

