‘மதராஸி’: எல்லோரும் பாக்கலாமா? சென்சார் சர்ட்டிபிகேட் என்ன தெரியுமா?

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்திலிருந்து டிரைலர் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழுவின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் மதராஸி திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கைத்துறை, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான, கூலி திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனால் சிறுவர்கள் பார்க்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து, கூலி படக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் சென்சார் போர்டை நாடும்படி தீர்ப்பு வெளியானது.
திரைப்படத் தணிக்கை சான்றிதழில் பல வகை உண்டு.
அவை யு (U), யு/ஏ (U/A), ஏ (A), எஸ் (S) ஆகிய நான்காகும். இந்த சான்றிழ்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வயது வரம்பு உள்ளவர்கள்தான் காணவேண்டும் என்று விதி உள்ளது.
யு (U) – அனைவரும் கட்டுப்பாடு இல்லாமல் பொதுவில் திரைப்படத்தை பார்க்கலாம்
யு/ஏ (U/A) – 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றொர்களின் வழிக்காட்டுதலுடன் திரைப்படத்தை பார்க்கலாம்
ஏ (A) – வயது வந்தோர்கள் பார்க்கலாம். அதாவது 18+ மக்கள் இந்த சான்றிதழ் பெற்ற படத்தை காணலாம்.
எஸ் (S) – சில சிறப்புக் குழுவினர் மட்டும் பார்க்கும் திரைப்படங்கள். அதாவது மருத்துவம் சார்ந்த படங்கள்.
மேற்கண்ட பிரிவுகளில் எஸ் (S) சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளில் வெளியாகாது. அது ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே உரியது என்பதால், அவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
இந்த நிலையில், மதராஸ் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆகவே அனைவரும் பார்க்கலாம். அதே நேரம், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பெரியவர் துணையோடு பார்க்க வேண்டும்.