“எல்லா மதமும், கடவுளும்…”: சாதனை படைக்கும் Madharasi Trailer!

“எல்லா மதமும், கடவுளும்…”: சாதனை படைக்கும் Madharasi Trailer!

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக  நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

டிரைலரின் ஆரம்பத்தில் “உன்னை போல் பிறரை நேசி… எல்லாரையும் உன் குடும்பமாக நினை.. இதைத்தான் எல்லா மதமும்.. எல்லா கடவுளும் சொல்கிறார்கள்” என்ற வசனத்துடன் டிரைலர் தொடங்கிறது. இதைத்தொடர்ந்து துப்பாக்கி சத்தம், குண்டு வெடிப்பு என டிரைலர் பட்டையை கிளப்பு கிறது.

அதே போல “துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும்..”, ” வில்லன் நான் தான்டா” என்று சொல்லும் வசனம் மாஸாக உள்ளது.

ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ், ” இந்த படம் கஜினி படம் போல, காதல், பழிவாங்குவது இருக்கும்” என சொல்லி இருந்தார். அதே போல டிரைலரில் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு அதிரடி காட்டி இருக்கிறார்.

வெளியிட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை அடைந்து சாதனை படைத்து இருக்கிறது மதராஸி டிரெய்லர்.