மறைந்த விஜயகாந்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சங்கம் மலரஞ்சலி!

தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 -வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (25.08.25) நடிகர் சங்க வளாகத்தில் அவருடைய திருவுருவப் படத்துக்கு நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஶ்ரீமன், ஹேமச்சந்திரன், வாசுதேவன், நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதா குமாரி, சவுந்தரராஜா, சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்டோர் மலரஞ்சலியும் மரியாதையும் செலுத்தினர்.