“மதம் மாறி எங்க சாமியவே திட்டுறான்!”: ‘பரமசிவன் பாத்திமா’ விழாவில் இயக்குநர் கார்வண்ணன்

“மதம் மாறி எங்க சாமியவே திட்டுறான்!”: ‘பரமசிவன் பாத்திமா’ விழாவில் இயக்குநர் கார்வண்ணன்

‘பரமசிவன் பாத்திமா’ என்ற புதிய படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார் இசக்கி கார்வண்ணன். இவர் ஏற்கெனவே சேரன் நடிப்பில் ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை இயக்கியவர்.

‘சார்’ படத்தில் ஜோடியாக நடித்த விமல் – சாயாதேவி இப்படத்திலம் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.

‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினருடன், ‘நாம்தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் கார்வண்ணன் பேசும்போது, “நம்மைச் சுற்றி நடக்கும் வாழ்வியல் கதைதான், இந்தத் திரைப்படம். சின்ன வயசில் என்னுடன் விளையாடிக் கொண்டு இருந்த முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துச்சாமி எல்லாம் திடீர்னு காணாமல் போயிட்டாங்க.. எங்கடா போயிட்டாங்கனு பார்த்தா வேற பெயர்ல இருக்காங்க.. அதை திரையில வச்சிருக்கோம்… என்கூட எங்க குலசாமிய கும்பிட்டவங்க… நம்ம முன்னோர்களையே திட்ட ஆரம்பிச்சான் அதுதான் இந்த படம்..

இது மதம் சம்பந்தமான படம் இல்ல.. ஹாரர் மூவி…” என்று பேசினார்.

ஆக மதமாறுவது குறித்த சர்ச்சை, படத்தில் இருக்கும் என்றே தோன்றுகிறது.

Related Posts