ஃபயர்: திரை விமர்சனம்
இளைஞன் காசியை காணவில்லை என்று அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகா் அளிக்கிறார்கள். இந்த வழக்கை, தை விசாரிக்கத் துவங்குகிறார் இன்ஸ்பெக்டர்.
அவர் விசாரித்த இடங்களிலெல்லாம், காசி குறித்து நல்லவிதமாகவே சொல்கின்றனர்.
இந்த சூழலில், காசியை கொன்றதாக பெரியவர் ஒருவர் போலீஸிடம் சரணடைகிறார்.
ஆனால், காசி உயிரோடு இருப்பதாகவும் அவர் தங்களிடம் போனில் பேசியதாகவும் காசியின் பெற்றோர் கூறுகின்றனர்.
காசிக்கு என்ன ஆனது… என்கிற பகீர்தான் மீதிக்கதை.
சில ஆண்டுகளுக்கு முன், நாகர்கோவிலில் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய காசி என்பவனின் வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியது. அதை அடிப்படியாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஜே எஸ் கே.
காசி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் பாலாஜி முருகதஸ். காதல் காட்சிகளில் ரசிக்கவைக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் ஜே எஸ் கே, மிடுக்காக நடித்து உள்ளார்.
கதாநாயகிகளான சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மஹாலட்சுமி மற்றும் காயத்ரி ஷான் ஆகிய நான்கு ஹீரோயின்களுமே சிறப்பாக நடித்து உள்ளனர்.
படத்தின் இரண்டாம் பாதியில் இவர்கள் நால்வரின் கதாபாத்திரமும் கதையை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
ன்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே சிறப்பு. எஸ் கே ஜீவாவின் வசனங்கள் அதிர்வலையை ஏற்படுத்துகின்றன. சதீஷின் ஒளிப்பதிவு அருமை.
ஒரு பெண் எந்த இடத்தில் தவறான ஆண் மகனிடம் விழுந்து போகிறாள் என்பதை இயல்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஜே.எஸ்.கே.
குரூர எண்ணம் கொண்ட ஆண்களிடம் பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற பாடத்தைத் தருகிறது படம்.
