சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்கு மற்றுமொரு அங்கீகாரம்!

சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்கு மற்றுமொரு அங்கீகாரம்!

இயக்குநர் சீனு ராமசாமியின், கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம், ஸ்பெயின் நாட்டில்  நடைபெறும் ஜிரோனா திரைப்பட விழாவில்  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

தேசிய விருது இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் யோகிபாபு,  ஏகன், சகாய பிரிகிடா சத்தியா தேவி உள்ளிட்டோர் நடித்து வெளியான உள்ள கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.  

வெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாக்களில் அங்கீகாரமும் பெற்றது. திரையரங்குகளில் வெளியான பிறகு, “உறவுகளின் மேன்மையை, அன்பைச் சொல்லும் திரைப்படம்” என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

ஜப்பானில் நடைபெற்ற 10 வது டாப் இண்டி திரைப்பட விருது எனும் பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரையில் நடித்த சத்யா தேவிக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. மேலும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருதுகளுக்கு நாமினேஷன் என்ற தகுதியை பெற்றது.

இந்நிலையில் மற்றுமொரு அங்கீகாரமாக,  ஸ்பெயின் நாட்டில் 36 வருடமாக நடந்து வரும் பாரம்பரிய ஜிரோனா திரைப்பட விழாவில்  சீனு ராமசாமியின்கோழிப்பண்ணைசெல்லதுரை
தேர்வு செய்யப்பட்டுள்ளது.