miss maggie teaser: இந்த லேடி யாருன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!

miss maggie teaser: இந்த லேடி யாருன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!

யோகி பாபுஇ மாதம்பட்டி சிவகுமார், ஆத்மிகா உள்ளிட்டோர் நடிக்கும் படம், மிஸ் மேகி. லதா ஆர் மணியரசு இயக்குகிறார்.டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இன்று படத்தின் டீசர் வெளியாகி, கவனத்தை ஈர்த்துள்ளது.

வக்கீலாக இன்ட்ரோ ஆகிறார் யோகிபாபு. கோர்ட்டில், சரியாக வாதாட முடியாமல் தவிப்பது, நிறைய கடன் வாங்கிவிட்டு, பயந்து ஓடுவது என வழக்கம்போல ரசிக்கவைக்கிறார் யோகிபாபு.இதற்கிடையே ஆத்மிகா அறிமுகமாகிறார். தொடர்ந்து அவரும் மாதம்பட்டி சிவகுமாரும் காதலிக்கும் காட்சிகள் தொடர்கின்றன. அவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

இந்த நிலையில், ஆங்கிலோ – இந்தியன் மூதாட்டியாக நுழைகிறார் யோகிபாபு. அவரது கெட்டப் ரசிகர்களை ஈர்க்கும் என்று இப்போதே சொல்லலாம்.

படம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

படத்தின் டீசர்:

 

Related Posts