ரியல் ஜோடி அசோக் – கீர்த்தியின்” புளூஸ்டார் ” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரியல் ஜோடி அசோக் – கீர்த்தியின்” புளூஸ்டார் ” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லெமன் லீப் கிரியேசன்ஸ் ஆர்.கணேஷ்மூர்த்தி ,

ஜி. சவுந்தர்யா  மற்றும் நீலம் புரொடக்சன்ஸ்   பா. இரஞ்சித் இணைந்து தயாரிக்க,  ஜெய்குமார் இயக்கியிருக்கும் படம், “புளூஸ்டார்”.

அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இது.

கோவிந்த் வசந்தா இசையமை்க,,  தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள்  அறிவு மற்றும் உமாதேவி.

படத்தின் இயக்குநர் ஜெய்குமார், இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூஸ்டார்.

ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

காதல் செய்து, வாழ்க்கையில் இணைந்துள்ள அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன்  ஜோடியாக நடித்துள்ளனர்.