“ஹாலிவுட் தரத்தில் ஸிங்க்!”: ஆஹா ஓ.டி.டி.யில் வெளியீடு

“ஹாலிவுட் தரத்தில் ஸிங்க்!”: ஆஹா ஓ.டி.டி.யில் வெளியீடு

ஆஹா ஒ டி டி தளத்தில் வரும் ஜூலை 21 ம் தேதி SYNC என்ற படத்தை வெளியிடுகிறது. SYNC என்றால் ஒத்திசைவு என்று அர்த்தம். இப்படத்தை விகாஷ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கி உள்ளார்.ஹாரர் வகை படமான சிங்க் படத்தை இயக்குனர் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

நிகழ்வில் பேசிய டைரக்டர் விகாஷ் ஆனந்த் “ஒரு கார் மோதி விபத்துக்குள்ளாகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த கதை செல்கிறது.  எதற்காக காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் என் நண்பர்களும் சேர்ந்து இந்த படத்தை தந்துள்ளோம். ஆஹா எங்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை தந்துள்ளது. நான் ஹாலிவுட் படத்தில் பாதிப்பில் படம் எடுக்க முயற்சிக்கிறேன் என்று சொல்வதில் தவறு இல்லை. எங்களுடைய சிறு பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் படம் தர முயற்சித்துள்ளேன். நான்கு பேரை வைத்துதான் படம் நகர்கிறது. ஒரே இடத்தில் பெரும்பான்மையான காட்சிகளை எடுத்துள்ளேன். ஆனால் சுவாரசியமாக இருக்கும் கண்டிப்பாக ஒரு நல்ல படத்தை தந்த திருப்தி எனக்குள்ளது “என்கிறார்.

Related Posts