ஓ.டி.டி.யில் ‘பர்ஹானா’! ஆனாலும் தொடரும் இஸ்லாமியர் எதிர்ப்பு!

ஓ.டி.டி.யில் ‘பர்ஹானா’! ஆனாலும் தொடரும் இஸ்லாமியர் எதிர்ப்பு!

ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யார ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், பர்ஹானா.

இப்படத்தின் டிரெய்லர் வெளியான போதே, சர்ச்சை ஏற்பட்டது.

இஸ்லாமிய பெண் பர்தாவை கழற்றும் காட்சி..  அடுத்து நிர்வாணமாக ஒரு பெண் செல்லும் காட்சி..

இது இஸ்லாமிய மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

படம் வெளியான பிறகு, மேற்கண்ட இரு காட்சிகளும் வேறு வேறு என்பது புரிந்தது.

ஆனாலும், படத்தில் இஸ்லாமிய மதத்தை, இஸ்லாமிய பெண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில், இஸ்லாமிய அமைப்பினருக்கு படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.

படம் பார்த்த அமைப்புகள், இஸ்லாத்தை புண்படுத்தும் காட்சிகள் இல்லை என்று பேசினர்.. அறிக்கைவிட்டனர்.

இதற்கிடையே திரைப்பட இயக்குநர் அமீரும், இப்படத்தில் இஸ்லாமியரை புண்படுத்தும் காட்சிகள் இல்லை என பேசினார்.

ஆனாலும் படத்துக்கு எதிர்ப்பு தொடர்கிறது. பிரபல எழுத்தாளர் பெர்தூஸ் ராஜகுமாரனும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மேலும், “சில இஸ்லாமிய குழுக்கள், இந்த படத்தைப் பார்த்து என்ன புரிந்து கொண்டு நல்ல தரமான படம் என்று சான்று கொடுத்தார்கள்…” என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

அதே போல, சாதிக், “ செக்ஸ் கால் சென்டரில் வேலை செய்யும் இஸ்லாமிய பெண் – அதன் மூலம் அவள் சந்திக்கும் சிக்கல்,, பர்ஹானா  படத்தின் ஒன்லைன் இதுவே!

பொதுவாக இது போன்ற கால் சென்டர்களில் வாய்ஸ் சேஞ்சரில் ஆண்களே பேசுவார்கள் இதுக்கு எதுக்கு பெண்… அதுவும் ‘தஹஜத்’ உட்பட ஆறு வேளை தொழுகும் இஸ்லாமிய பெண் ஏன்…?

இஸ்லாமிய ஒழுக்கங்களுடன் வாழும் ஒரு பெண்ணை குரல்வழியேனும் தடவி பார்க்க வேண்டும், அதுவும் அவள் நோன்பில் இருக்கும் போது நிகழ்த்த வேண்டும் என்கிற மிக அருவருப்பான இச்சை…

இதுபோன்ற படங்கள்,  முஸ்லீம் பெண் கல்வியை தடுப்பதற்கும், வேலைக்கு போகும் பெண்கள் நிச்சயம் மார்க்க ஒழுக்கங்களை மீறுவாள் எனச் சொல்லி அவர்களை வீட்டில் அடைப்பதற்கும் பயன்படும்…

ஆயிரம் காஷ்மீர் பைல்ஸும்,கேரள ஸ்டோரி வந்தாலும் பிரச்சனை இல்லை….ஆனால் ஃபர்ஹானா போன்ற படங்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு, அதன் பெண் கல்விக்கு, பெண் முன்னேற்றத்திற்கு பேராபத்தை விளைவிக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், “இஸ்லாமிய வாழ்வியல் இறுக்கமானது,இருள் சூழ்ந்தது,வண்ணங்கள் அற்றது…ஒரு வித claustrophobic ஆனது என்பதை காட்சிகள் வழியே சொல்கிறார் இயக்குனர்..பிறகு மிக மோசமான styrio typing….இஸ்லாமிய பெண்களிடம் செல் போன் கூட இருக்காது..ஏன்..லேண்ட் லைன் எடுத்து பேசும் உரிமை கூட இருக்காது…அவர்கள் உருது தமிழ் கலந்து தான் பேசுவார்கள்…ஆண்களே அங்கு அதிகாரம் கொண்டவர்கள் பெண்கள் அடிமைகள்… இப்படி சொல்லிட்டே போகலாம்!!!!!இது தான் இஸ்லாமிய வாழ்வியலா!!!” என்று பதிவிட்டு உள்ளார்.

இஸ்லாமிய அமைப்புகள், பர்ஹானா படத்தின் மீதான தங்கள் எதிர்ப்பை கைவிட்டாலும், சமூகவலைதளங்களில் இஸ்லாமியர்கள், தங்கள் கண்டனத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  பர்ஹானா திரைப்படம் அடுத்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்ற தகவல் உலவுகிறது.

 

Related Posts