சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள ‘கீதம் வெஜ்’ ரெஸ்டாரண்ட்!

சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள ‘கீதம் வெஜ்’ ரெஸ்டாரண்ட்!

இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், ‘கீதம் வெஜ்’ சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்திய உணவின் சுவையை கீதம் மூலம் கொண்டு சென்று வெற்றி பெற செய்த, எங்கள் பார்ட்னர்ஸூக்கும் நன்றி.சென்னையை தளமாகக் கொண்ட ‘கீதம் வெஜ்’ அதன் உயர்தர, தூய்மையான சைவ தென்னிந்திய உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. நாங்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளான இந்தோ- சைனீஸ், சாட், வட இந்திய உணவு வகைகள் மற்றும் துருக்கிய இனிப்புகள் என பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறோம். உணவகங்களைத் தவிர, ‘கீதம் வெஜ்’ஜின் சுவையூட்டும் இனிப்புகளுக்கென தனி ஸ்டாலும் உள்ளது.

‘கீதம் வெஜ்’ஜின் இனிப்புகள் மற்றும் பிரத்தியேகமாக விற்கப்படும் உயர்தர பிற பொருட்கள் எல்லாம் எங்கள் ஒவ்வொரு உணவகத்தின் ஸ்டால்களிலும் உண்டு. இவை தவிர ஹோம் டெலிவரி, வெளிப்புற கேட்டரிங் சேவைகள், வெட்டிங் கேட்டரிங் ஆர்டர்கள் மற்றும் பஃபே நிகழ்வுகளையும் திருப்திகரமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தோடு உங்களுக்கு நடத்தி தருவோம்.

கூடுதலாக, எங்கள் திறமையான கால் சென்டர் குழு சரியான நேரத்தில் செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், குறைகள் இருந்தால் அவற்றை விசாரித்து உடனே நிவர்த்தி செய்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஒவ்வொரு முறையும் சுவையான உணவு வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது ‘கீதம் வெஜ்’.இதன் 11வது கிளை திறப்பில் நடிகர்கள் நளினி, YG மகேந்திரன், ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். “நல்ல வெஜ் உணவு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது நம்முடைய ‘கீதம் வெஜ்’. நீங்கள் எந்த நேரத்தில் பசி என்று சாப்பிட வந்தாலும் சுடச்சுட இங்கு உங்களுக்குப் பிடித்த வெஜ் உணவு கிடைக்கும்.

காலை 6 மணியில் இருந்து இரவு 2 மணி வரை ‘கீதம் வெஜ்’ திறந்திருக்கும். வயதாக வயதாக நான் வெஜ் குறைத்து கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதனால் நானும் வெஜ்தான். உணவின் சுவை இங்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் ‘கீதம் வெஜ்’ சிறப்பானது, நம்பகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றது. வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன உணவு அனுபவத்தை வழங்க காத்திருக்கிறது” என்றார்.

Related Posts